To leave this site quickly, click the Quick Exit button below. Learn about Quick Exit button here. If you don’t want your browser history saved, please open incognito browsing mode. Learn about incognito mode here. If you're in immediate danger, please call 000.

பாதுகாப்புத் திட்டமிடல் சரிபார்ப்புப் பட்டியல்

இந்தச் சரிபார்ப்புப் பட்டியல், பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் செய்ய முடிகிற காரியங்களுக்கானதோர் வழிகாட்டியாகும்.

உங்களைக் குறித்து, ஒரு குடும்ப உறுப்பினர் அல்லதுவாடிக்கையாளர் குறித்து நீங்கள் கவலையடைகிறீர்கள்என்றால், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணில்அழையுங்கள்.

டீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.

வீட்டில் பாதுகாப்பு

கவனித்துக் கொள்கிறதோர் சமுதாயம்

  • பதிலளிப்பது என்பது ஒவ்வொருவரின் வேலையாகும்.சண்டை போடுவது, சத்தம் போடுவது அல்லது கூக்குரல்களைக் கேட்கிற பட்சத்தில், உங்களை நம்புகிற உங்களது அண்டை வீட்டார் 000 என்ற எண்ணில் காவல்துறையினரை அழைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருக்கும் சிலர், உதவி பெறுவதற்காக அண்டை வீட்டாரை உசார்படுத்தத் தட்டுதல் குறியீடுகளை வைத்திருக்கிறார்கள்.

  • நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால், தஞ்சமடைவதற்கு ஓரிடம் வைத்துக் கொள்வது.

     உங்களது பணப்பை அல்லது மொபைல் தொடர்புப் பட்டியலில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களது தொலைபேசி எண்களை வைத்திருங்கள்.

  • நீங்கள் மற்றவர்களோடு தொடர்பில் இருக்க முடிகிற வகையிலும், உங்களது அழைப்புகளைத் தொலைபேசி இரசீது அல்லது அழைப்புப் பட்டியல்களிலிருந்து பார்க்க முடியாதபடியும், உங்களுக்கென்று சொந்தமாக மொபைல் ஃபோன் மற்றும் திட்டத்தை (விரும்பத்தக்கதாக பிரிபெய்டு) வைத்துக் கொள்ளுங்கள்.

  • காரியங்கள் கட்டுக்கடங்காமல் போய் விடலாம் என நீங்கள் உணரும் போது தப்பிக்க ஒரு திட்டத்தைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தப்பிப்பதற்கானதோர் திட்டத்தைத் திட்டமிடுதல்

  • உங்கள் வீட்டில் / அடுக்குமாடியில் உள்ள அனைத்து அறைகளிலிருந்தும், அவசரத்தில் விரைவாக வெளியேறுவதற்குத் திட்டமிட்டு அதனைப் பயிற்சி செய்யுங்கள்.

  • நீங்கள் அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ள நிலையில், உபரி சாவிகள், முக்கியமான ஆவணங்கள், குழந்தைகளுக்கானதோர் பிரத்தியேகமான பொம்மை மற்றும் உபரியாக கொஞ்சம் பணம் ஆகியவற்றோடு ஏதேனும் ஒரு இடத்தில் தப்பிச் செல்வதற்கானதோர்சிறு பையை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பரிந்துரை மருந்துகள் தேவைப்பட்டால், தப்பிச் செல்வதற்கு எடுத்து வைத்துள்ள உங்கள் பையில் உபரியாக ஒரு சீட்டை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

  • சாவிகள், முக்கியமான ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்றவற்றின் புகைப்பட நகல்கள் போன்றவற்றின் நகல்களை உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நீங்கள் நம்புகிற ஒருவரிடம் கொடுத்து வையுங்கள்.

  • உங்களுக்கு நடந்து செல்வதில் பிரச்சினைகள் அல்லது ஊனங்கள் இருந்தால், நீங்கள் தொலைபேசியில் அழைத்தாலோ அல்லது உரைச் செய்தி அனுப்பினாலோ நேரடியாக உங்கள் வீட்டிற்கே வரும் வகையில் ஒரு நண்பரை முன்னதாகவேஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிலர்முன்னதாகவே ஒப்புக் கொண்டபடியான குறியீட்டுவார்த்தைகளை உபயோகிக்கிறார்கள். அந்த வழியில், வன்முறை செய்பவர் நீங்கள் பேசுவதைக் கேட்டாலும் கூடநீங்கள் தொலைபேசியில் அழைக்க முடியும்.

  • பாதுகாப்பாக இருக்கும் என்றால், துஷ்பிரயோகமான அல்லது அச்சுறுத்தும் நிகழ்வுகள் குறித்து ஒரு குறிப்பேட்டில் எழுதி வையுங்கள். உங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவு வேண்டும் என்றால் இவை உங்களுக்கு உதவ முடியும்.

பயனுள்ள எண்களைச் சேகரித்து வைத்தல்

பின்வருபவை போன்ற சில உபயோகமான முகவரிகள் மற்றும் எண்களைச் சேகரித்து வைக்கப் பாருங்கள்:

  • உள்ளூர் வாடகை வாகனச் சேவை (உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில், அணுகக் கூடிய வாடகை வாகனச் சேவைகள்).
  • உங்கள் மாநிலத்தில் அல்லது பிரதேசத்தில் உள்ள நெருக்கடிநிலைத் தொலைபேசி எண்.
  • மிக அருகாமையில் உள்ள நெருக்கடி நிலைத் தொடர்பு மையம்.
  • உங்கள் பகுதிக் காவல் நிலையத்தின் முகவரி.
  • நீங்கள் எப்போதுமே 1800RESPECT சேவையை 1800 737 732 என்ற எண்ணில் அழைக்கலாம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரிந்து சென்ற பிறகு பாதுகாப்பு

  • நீங்கள் உங்கள் துணைவரிடமிருந்து பிரிந்து வந்து விட்டீர்கள் என்றால், உங்களால் முடிந்தால் வெளியிட விளக்குகள், கூடுதல் ஜன்னல் அல்லது கதவுப் பூட்டுகள், அல்லது கேட்டுகள் போன்றவற்றைப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பைப் பார்த்துக் கொள்வதற்காக காவல்துறையினர் பெரும்பாலும் ஒரு பாதுகாப்பு மேம்படுத்தலைச் செய்வார்கள் மேலும் உங்கள் குறிப்பிட்ட வீடு அல்லது அடுக்கு மாடிக்கு பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து உங்களுக்கு யோசனைகளைக் கொடுப்பார்கள். செலவுகளைப் பார்த்துக் கொள்வதற்கு சில குடும்ப மற்றும் வீட்டு வன்முறைச் சேவைகளிடத்தில் அல்லது காவல்துறைச் சேவைகளிடத்தில் நிதிகள் உள்ளன.

  • உங்கள் மொபைல் எண்ணை மாற்றிவிட்டு அதில் ‘பிரைவேட்’ என அமைவு செய்து விடுங்கள். குழந்தைகள் குறித்து நீங்கள் தகவல் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், வேறொரு சிம் கார்டை உபயோகியுங்கள்.

  • அரசாங்க முகமைகள், பயன்பாட்டு நிறுவனங்கள், சட்ட அமைப்புகள் மருத்துவர்கள், பாடசாலைகள் போன்றோர்களிடம், உங்கள் விபரங்களை இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.

  • முக்கியமான அஞ்சல்களுக்கு ஒரு அஞ்சல் பெட்டியை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டு முகவரியை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • உங்களிடம் ஏற்கெனவே பாதுகாப்பிற்கென ஒரு அமைப்பு இல்லை என்றால், வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சேவையினரிடம், ஒரு சமுதாய வழக்குரைஞரிடம் அல்லது காவல்துறையிண்டரிடம் பாதுகாப்புப் பெறுவது குறித்து பேசுங்கள். இவர்கள், சில ஆபத்துக்கள் குறித்து முன்னதாகவே காவல்துறையினரை உசார்படுத்தலாம். அவர்கள், துஷ்பிரயோகம் செய்யும் நபரை உங்களது பணியிடத்திற்கு வராமல் தடை செய்யுமாறு கடுதம் எழுதவும் செய்யலாம்.

பொது இடத்தில் அல்லது பணியிடத்தில் பாதுகாப்பு

  • மக்கள் நடமாட்டம் மிகுந்ததோர் பொது இடத்தில் உங்கள் காரை நிறுத்தி வையுங்கள். கட்டிட அடித்தள வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்த்து விடுங்கள், அல்லது நீங்கள் அவற்றை உபயோகிக்க வேண்டியிருந்தால், உங்கள் வாகனத்தின் அருகே வரை உங்களோடு ஒருவரை நடந்து வரச் செய்யுங்கள்.

  • உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால், கூடிய விரைவில் பொது இடத்திற்கு அல்லது மக்கள் நடமாட்டம் மிகுந்ததோர் இடத்திற்கு வந்து விடுங்கள்.

  • நீங்கள் உங்கள் துணைவரிடமிருந்து பிரிந்து வந்து விட்டீர்கள் என்றால், அலுவலக வரவேற்பிலேயே உங்களுக்கு வருகிற கால்கள் மற்றும் பார்வையாளர்களை வடிகட்டி விடுமாறு உங்கள் உயரதிகாரியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். வணிக வளாக மையம் போன்றதோர் பொது இடத்தில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், பாதுகாப்பு ஊழியர்களிடம் பேசி, உங்கள் முன்னாள் துணைவரின் புகைப்படத்தை அவர்களிடம் காண்பியுங்கள்.

  • உங்கள் துணைவரிடமிருந்து நீங்கள் பிரிந்து வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் வழக்கங்களைத் தொடர்ச்சியாக மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள். கூடுமான இடங்களில், வெவ்வேறு தொடர்வண்டிகள் அல்லது டிராம்களைப் பிடித்துச் செல்லுங்கள், வெவ்வேறு நேரங்களில் வீட்டை அல்லது பணியிடத்தை விட்டுச் செல்லுங்கள், வெவ்வேறு இடங்களில் அல்லது ஆன்லைனில் பொருள் வாங்குங்கள்.

  • உங்கள் பணியிடத்திற்கு அருகில் துஷ்பிரயோகம் செய்பவர் வருவதைத் தவிர்ப்பதற்கு பாதுகாப்பு உத்தரவுகள் ஏதுமிருந்தால் அது குறித்து உங்கள் மேலதிகாரி அல்லது பாதுகாப்பு ஊழியர்களிடம் சொல்லி வையுங்கள். உங்கள் பணியிடத்தில் அல்லது உங்கள் பையில் உங்கள் உத்தரவின் நகல் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் பாதுகாப்பு

  • உங்களைத் துஷ்பிரயோகம் செய்பவரால் அணுக முடியாத ஒரு பொதுக் கணினி (நூலகம், சமுதாய மையம்) அல்லது ஒரு நண்பரின் கணினியை உபயோகித்துக் கொள்ளுங்கள்.

  • உங்கள் ஃபேஸ்புக் கணக்கு மற்றும் உங்கள் குழந்தையின் கணக்குகளை மாற்றி விடுங்கள் அல்லது அழித்து விடுங்கள், அல்லது அணுகலைக் கட்டுப்படுத்த உங்கள் அந்தரங்க அமைவுகளை மறுஆய்வு செய்யுங்கள். நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்பது குறித்த தகவல்களை மக்கள் தற்செயலாக கொடுத்து விட முடியும்.

  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை மாற்றி விடுங்கள். அதனைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக்குங்கள் - அந்தக் கணக்கில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த ஆண்டை உபயோகிக்காதீர்கள்.

  • உங்கள் கணினித் தொழில்நுட்பப் பணியாளரிடம், உங்கள் கணினியில் ஸ்பைவேர் அல்லது கீஸ்ட்ரோக் லாக்கிங் நிரல்கள் இருக்கின்றனவா எனப் பார்க்கச் சொல்லுங்கள்.

சிறுபிள்ளைகளுக்கு உதவுதல்

  • ஆபத்து குறித்த எச்சரிக்கை அடையாளங்கள் இருக்கும் போது அவற்றைத் தெரிந்து கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

  • இயற்கைப் பேரிடல் திட்டமிடுதல், தீவிபத்துப் பாதுகாப்பு போன்றவற்றின் போது நீங்கள் செய்யக்கூடிய மற்ற பாதுகாப்பு உரையாடல்களைப் போன்றே உரையாடல்களை நடைமுறைக்குத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

  • அவசர காலத்தில் தப்பிச் செல்லும் வழிகளைப் பயிற்சி செய்து கொள்ளுங்கள் - ஒரு தீவிபத்து அல்லது சூறாவளிப் பயிற்சியின் போது நீங்கள் பேசுவதைப் போலவே, ஒரே நேரத்தில் இவற்றைக் குறித்தும் பேசுங்கள்.

  • துஷ்பிரயோகம் செய்பவர்கள் கோபமாக அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் போது அவர்களைத் தடுத்து நிறுத்துவது குழந்தைகளின் பொறுப்பல்ல என்பதை அவர்களிடம் சொல்லி வையுங்கள்.

  • ஒரு அவசர நிலையில் உங்கள் குழந்தைகள் யாரை அழைக்கலாம் அல்லது எங்கே போகலாம் என்பது குறித்து அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இதில் எண்ணை எவ்விதம் அழைத்து, காவல் துறையினரிடம் தொடர்பு கொள்ளக் கேட்பது மற்றும் அவர்களது முகவரியை எவ்விதம் கொடுப்பது என்பவை அடங்குகிறது.

  • வன்முறை குறித்து, நீங்கள் நம்புகிற பாடசாலைப் பெற்றோர்களோடு சேர்த்து, பாடசாலைகள் அல்லது குழந்தைக் கவனிப்பு மையங்களில் சொல்லுங்கள். அவர்கள் வன்முறை அதிகரிப்பதற்கான அடையாளங்கள் ஏதுமிருக்கின்றதா என பார்த்து, உங்கள் குழந்தைகளின் உணர்ச்சி ரீதியிலான தேவைகளுக்குக் கவனிப்பளிப்பதில் உதவவும் முடியும். கவனிக்கின்றதோர் சமுதாயம் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பாடசாலை அல்லது குழந்தைக் கவனிப்பு மையத்தினர், யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளும் வகையில், உங்கள் பாதுகாப்பு உத்தரவின் நகல் ஒன்றையும், துஷ்பிரயோகம் செய்பவரின் புகைப்படம் ஒன்றையும் அவர்களிடம் கொடுத்து வையுங்கள்.
Tamil - Domestic and family violence: how to make a plan to look after yourself

உடனடி ஆபத்து எனும் நிலையில், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணை அழையுங்கள்.

டீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.

 

தொலைபேசி ஆற்றுதல்

ஒரு டீஐஎஸ் மொழிபெயர்ப்பாளர் கொண்டு தொலைபேசி ஆற்றுதல் சேவையை உபயோகித்தல்

தொலைபேசி ஆற்றுதல்

 

Developed with: Safe and Equal