பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்திருப்பவர்களுக்கு ஆதரவளித்தல்
வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு நான் எவ்விதம் ஆதரவளிப்பது? வீட்டு மற்றும் குடும்ப வன்முறைகள் என்பவை பொதுவானவையாகும் - மூன்று பேர்களில் ஒரு பெண் தனது வாழ்நாளில் குடும்ப அல்லது வீட்டு வன்முறையை அனுபவிக்கிறார். நடைமுறையில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.
நான் என்னத்தைக் கவனித்துப் பார்க்க வேண்டும்?
வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கென்றே இருக்கிற பொதுவான சில பழக்க வழக்கங்களும், அடையாளங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
வீட்டு அல்லது குடும்ப வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
-
வெளிப்படையான காரணம் எதுவுமில்லாமலேயே வெளியே போவதை நிறுத்திக் கொள்ளலாம், அதைக் குறித்துக் கேட்கும் போது, தங்களை வெளியே போக விடுவதில்லை எனச் சொல்லலாம்.
-
வெளிப்படையான காரணம் ஏதுமின்றியே பதற்றமாக, மன அழுத்தமுடையவராக, களைப்படைந்தவராக அல்லது கண்ணீர் மல்கியவராகத் தோன்றலாம்.
-
தங்களது துணையிடம் பயப்படுகிறவர்களாகவும், எச்சரிக்கையாக இருப்பவர்களாகவும், சுய-விமர்சனம் செய்பவர்களாக அல்லது சுய-உணர்வுடையவர்களாக இருப்பதாகத் தோன்றலாம், அல்லது அவர்களது துணை முரட்டுத்தனமானவராக அல்லது மற்றவர்களிடத்தில் கேவலமாக நடந்து கொள்பவராக இருக்கலாம்.
-
உங்களது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் அவர்களுக்குக் காயங்கள் இருக்கலாம் அல்லது மருத்துவமனையில் காலத்தைச் செலவிடலாம்.
-
அவர்களது போக்குவரத்துக்களை அல்லது செலவுகளை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கலாம்.
-
அவர்களை யாரோ பின் தொடர்கிறார்கள், கன்காணிக்கிறார்கள், உற்று நோக்குகிறார்கள் அல்லது கட்டுப்படுத்துகிறார்கள் எனச் சொல்லலாம்.
நீங்கள் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்றால் என்ன? என்ற பகுதியைப் படியுங்கள்.
கேட்டு விடுவது
கடைசியில், பிரச்சினையொன்று இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஒரே வழி, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து அந்த நபரிடமே கேட்டு விடுவது தான்.
உண்மையில், இது கடினமானதாக இருந்து விட முடியும்.
பின்வருபவை போன்ற நேரடியான, நாசூக்கான கேள்விகளைக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் கேட்க முயற்சிக்கலாம்:
-
வீட்டில் எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கின்றதா?
-
உங்களுக்கு இரத்தம் கன்றிப் போயிருப்பதைப் பார்த்தேன், அதற்கு வேறு யாரும் காரணமா?
-
உங்களது துணைவர் உங்களைப் பயமுறுத்துவதாகத் தோன்றுகிறது, பிரச்சினையொன்றுமில்லையே?
-
நீங்கள் நன்றாகத் தானே இருக்கிறீர்களா?
செவிகொடுப்பதற்கான வாய்ப்பினைக் கொடுத்து, உங்களது நண்பர் அல்லது பிரியமானவர் அந்தரங்கமாகப் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள், ஆனால் அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்காதீர்கள், முரண்பாடாகப் பேசாதீர்கள். நெருக்கடிக்கு ஆளாக்குவதும், முரண்பாடாகப் பேசுவதும், உங்களது நண்பர் அல்லது பிரியமானவரை இன்னும் அதிகமாகத் தனிமைப்படுத்திவிடும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
என்ன செய்வது
துஷ்பிரயோகத்தைக் குறித்துப் பேசுவதற்கு தைரியம் தேவைப்படுகிறது பாதிக்கப்பட்ட / தப்பிப் பிழைத்த அநேகர், மற்றவர்கள் தங்களை நம்ப மாட்டார்கள் என்றே அதிகம் பயப்படுகிறார்கள். யாராவது ஒருவர் உங்களிடம் வந்து தங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் எனச் சொல்லும் போது, அவரது துணைவர் அல்லது முன்னாள் துணைவர் அழகானவராக, இரக்கமுள்ளவராக அல்லது அருமையானவராகத் தோன்றுவதாக நீங்கள் நினைத்தாலும் கூட, அவர்களது பயத்தை தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும். வீட்டு மற்றும் குடும்ப வன்முறையைச் செய்பவர்கள், பொது இடங்களில் தங்களை நேர்மறையானதோர் வழியில் காண்பித்துக் கொள்வதில் மிகவும் நன்றாக இருக்க முடியும். இது துஷ்பிரயோகப் பழக்க வழக்க வகையின் ஒரு பகுதியாக இருக்க முடியும்.
உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு நீங்கள் உதவ முடிகிற சில வழிகள் இதோ:
-
அவர்களது பயத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
-
வன்முறை என்பது ஒருபோதும் சரியல்ல. அத்துஷ்பிரயோகத்திற்கு பாதிக்கப்பட்ட நபரையே குற்றம் சுமத்தாதீர்கள் அல்லது துஷ்பிரயோகம் செய்பவரின் பொறுப்பைக் குறைத்துச் சொல்லாதீர்கள்.
-
வன்முறை குணமுள்ள துணவர் ஒருவரை அவ்விதமே விட்டுவிடுவதில் அநேகத் தடைகள், கடினமான விருப்பங்கள் மற்றும் பெரும்பாலும் நன்கு-நிலைநிறுத்திய பயங்கள் மற்றும் கவலைகள் ஈடுபட்டிருக்கின்றன - அவற்றில் வன்முறையில் அதிகரிப்பு, வசிக்க வீடில்லாமல் போவது மற்றும் வறுமை ஆகியவை அடங்குகின்றன. பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்தவர் அங்கிருந்து செல்லத் தயாராக இல்லாமல் இருக்கலாம் அல்லது அப்படிச் செல்வது அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.
-
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்பதில், துஷ்பிரயோகத்தின் உடல்ரீதியிலான செயல்பாட்டையும் விட அதிகமானவை ஈடுபடுகின்றன. வன்முறை இழைப்பவர்கள், தரக்குறைவான வார்த்தைகள் மற்றும் உணர்ச்சி ரீதியிலான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் வாயிலாக தன்-நம்பிக்கையைக் குறிவைத்துத் தாக்கி, அவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறவர்களை ‘மளுங்கடிக்க” முயற்சிக்கிறார்கள். அவர்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கிற வலிமைகள் மற்றும் எதிர்த்தெழும் ஆற்றல் ஆகியவற்றை அங்கீகரியுங்கள்.
-
துஷ்பிரயோகம் செய்பவரை விட்டு அகல்வதா அல்லது அவரோடேயே இருப்பதா என்பது போன்ற பல்வேறு வாய்ப்புகள் வாயிலாகப் பாதுகாப்படைவதற்கு உதவுங்கள். பாதுகாப்புத் திட்டமிடும் பக்கத்தைப் பாருங்கள்.
-
நடைமுறை வழிகளில் உதவுங்கள் - போக்குவரத்தில், குறித்த நேரங்களில் கலந்து கொள்வதில், குழந்தைக் கவனிப்பில், அல்லது தப்பிச் செல்வதற்கானதோர் இடத்தில் போன்று. வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சேவைகள் குறித்துத் தெரிந்து கொண்டு, அதற்கு நேரம் குறிப்பதில் உதவி செய்ய முன்வாருங்கள்.
-
வன்முறை நடப்பதைப் பார்ப்பது, முழுக் குடும்பத்தின் மீதுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வன்முறையில் குழந்தைகள் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு உங்களது கவனிப்பு மற்றும் ஆதரவு குறித்ததோர் உணர்வை ஏற்படுத்தி, உங்கள் பகுதியில் [இணைப்புகள்] உள்ளதோர் குழந்தை அல்லது குடும்பச் சேவை வாயிலாக அவர்களுக்கு ஏற்ற உதவியை நாடிப் பெறுங்கள்.
-
உங்கள் மாநிலத்தில் / பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு உத்தரவுகள் குறித்துப் பேசுங்கள்.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை அபாயகரமானதாக இருக்கலாம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது அவர்களது குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கப்படுகிறது என்றால், அல்லது அவர்கள் தக்கப்பட இருப்பதாக நீங்கள் பயந்தால், 000 என்ற எண்ணில் அழையுங்கள்.
நீங்கள் எவ்விதம் உதவலாம் என்பது குறித்து இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால்:
-
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை & பால் ரீதியிலான தாக்குதலுக்கான [ஆங்கிலத்தில்] இணைய வளங்கள் என்பதைப் பாருங்கள்.
-
உங்கள் மாநிலத்தில் அல்லது பிரதேசத்தில் உதவிக்காக எங்கு செல்வது என்பதற்கு சேவைகள் வரைபடத்தைப் பாருங்கள் [ஆங்கிலத்தில்].
-
1800RESPECT சேவை குறித்து ஆற்றுநர் ஒருவரிடம் பேச, 1800 737 732 என்ற எண்ணில் அழையுங்கள்.
உடனடி ஆபத்து எனும் நிலையில், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணை அழையுங்கள்.
டீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.
பால் ரீதியிலான தாக்குதல் என்றால் என்ன?
பால் ரீதியிலான தாக்குதலைப் புரிந்து கொள்வது அதற்கேற்ப பதிலளிக்க நமக்கு உதவுகிறது.
பால் ரீதியிலான தாக்குதல் என்றால் என்ன?
Developed with: Safe and Equal