வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்றால் என்ன? வீட்டு மற்றும் குடும்ப வன்முறையைப் புரிந்து கொள்வது என்பது அவற்றுக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவுகிறது.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்பது, ஒரு அந்தரங்கமான உறவில் அல்லது மற்ற வகையான குடும்ப உறவில் ஏற்படுகிற துஷ்பிரயோகமான நடத்தையின் வடிவமாகும், அதில் ஒரு நபர் மற்றொரு நபரை மேற்கொண்டு அவரை அடக்கிப் பயமுறுத்துகிறார். இது வீட்டு வன்முறை, குடும்ப வன்முறை அல்லது அந்தரங்க துணைவர் முறை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வகை வன்முறை, அநேக விதமான உறவுகளில் ஏற்படலாம், உதாரணமாக: கணவன் மனைவிக்கு இடையே, அல்லது ஆண் பெண் நண்பர்களுக்கு இடையே; வயது நிரம்பியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே அல்லது வயது நிரம்பியவர்கள் மற்றும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு இடையே; அல்லது அத்தைகள், மாமாக்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் போன்ற தூரத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே; அல்லது பாலுறவு அல்லாத உறவு ஒன்றில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு இடையே ஏற்படலாம்.
இதனை ஒரு விதமான வலுக்கட்டாயம் மற்றும் கட்டுப்பாடு என்பதாகவே பெரும்பாலும் குறிப்பிடப்பிடுகிறோம். துஷ்பிரயோகம் செய்பவர்களை சில நேரங்களில் ‘வன்முறை செய்பவர்கள்' என்றே அழைக்கிறோம்.
உறவுகள் முடிந்து போய் விடும் போது அதோடு எப்போதுமே வீட்டு மற்றும் குடும்ப வன்முறையும் நின்று போய் விடுவதில்லை, ஆகவே அது முன்னாள்-துணைவர்களிடையேயும் ஏற்படலாம்.
துஷ்பிரயோகம் செய்கிறவர்கள், அதிகாரத்தையும், கட்டுப்பட்டையும் தக்க வைத்துக் கொள்வதற்காக அநேக யுக்திகளை உபயோகிக்கிறார்கள், அவை பின்வருபவை போன்றதாகும்:
-
உடல் ரீதியான தாக்குதல்கள், உதாரணமாக, திக்குமுக்காடச் செய்வது, அடிப்பது, தள்ளிவிடுவது மற்றும் தீங்கு விளைவிக்கப் போவதாக மிரட்டுவது.
-
பாலுறவு ரீதியிலான வன்முறைச் செயல்கள், கட்டாயப் பாலுறவு அல்லது ஒருவர் செய்ய விரும்பாத பால்-ரீதியிலான செயல்களைச் செய்யுமாறு அவர்களை வற்புறுத்துவது.
-
உணர்ச்சி ரீதியிலான துஷ்பிரயோகம், பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடுதல் மற்றும் ஏளனம் செய்தல், மரியாதைக் குறைவான நடத்தை.
-
ஆதரவுகளிலிருந்து, குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்து வைப்பது, அல்லது மிரட்டுவதற்காக குடும்பம் மற்றும் சமுதாயத்தை உபயோகிப்பது. இதில் உரைச் செய்திகளை அனுப்புதல் அல்லது ஃபேஸ்புக்கில் அஞ்சலிடுதல் அடங்கலாம்.
-
கெட்ட எண்ணத்தோடு பார்த்தல் அல்லது ‘ஒவ்வொரு அசைவையும்’ கண்காணித்தல், இதில் இணையத்தில், சமூக ஊடகம் வாயிலாக, அல்லது ஜிபீஎஸ் டிராக்கிங் சாதனங்கள் கொண்டு கெட்ட எண்ணத்தோடு பார்த்தலும் அடங்குகிறது.
-
அந்நடத்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நபரையே குற்றம் சுமத்துவது; துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நபருக்கு மனநலப் பிரச்சினைகள் அல்லது பதற்றக் கோளாறுகள் இருக்கின்றதெனச் சொல்வது; உண்மையைத் திரித்துக் கூறுவது அல்லது வேண்டுமென்றே திரிப்பது; தனிப்பட்ட உடைமைகள் அல்லது மேசை நாற்காலிகளை நகர்த்தி வைத்து விட்டு, அப்படிச் செய்ததை மறுப்பது; மேலும் அது போன்ற துஷ்பிரயோக நடத்தை நடந்ததையே மறுப்பது போன்ற மனோவியல் ரீதியிலான துஷ்பிரயோகம்.
-
வாழ்க்கைச் செலவுகளுக்குப் பணம் அல்லது ‘வீட்டைப் பராமரிப்பதற்கான பணத்தைத்” தர மறுப்பது; ஒருவரை வேலைக்குச் செல்ல விடாமல் தடுப்பது; குழந்தை ஆதரவு அமைப்பை சாதுரியமாகப் பயன்படுத்துவது; ஒருவரைக் கடனாளியாக்குகிற சட்டப்பூர்வ மற்றும் நிதிசார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடுமாறு அவரை மிரட்டுவது; பணம் கொடுக்குமாறு சொல்லி ஒருவருக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற நிதிசார்ந்த துஷ்பிரயோகம்.
-
ஒருவரது கடவுள் பக்தி சார்ந்த விஷயத்தை அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதிலிருந்து அவரைத் தடுப்பது அல்லது ஒருவருடையதல்லாத ஒரு நம்பிக்கை அல்லது கடவுள் பக்தி சார்ந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவரைக் கட்டாயப்படுத்துவது.
-
குழந்தைகள் உட்பட, பிரியமானவர்களைத் துன்புறுத்துவது அல்லது துன்புறுத்தப் போவதாக மிரட்டுவது.
-
வளர்ப்புப் பிராணிகளைத் துன்புறுத்துவது அல்லது துன்புறுத்தப் போவதாக மிரட்டுவது.
-
ஒருவரை மிரட்டுவதற்காக, ஆயாசமடையச் செய்வதற்காக, தவறாகப் பயன்படுத்துவதற்காக அல்லது வலிமையற்றவராகச் செய்வதற்காக குடும்ப சட்ட அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற சட்ட துஷ்பிரயோகம்.
துஷ்பிரயோகம் செய்பவர்கள், ஒவ்வொரு உறவிற்கும் தனித்துவமாக இருக்கிற வழிகளில் கட்டுப்பாட்டைச் செலுத்த முடியும். சில உறவுகளில், கொடுக்கிற மருந்துகளைக் கொடுக்காமல் நிறுத்திக் கொள்வது ஒருவகை கட்டுப்பாடாகும். உறவு ஒன்றிலிருந்து வெளியேற ஒருவர் முயற்சிக்கும் போது தற்கொலை செய்யப் போவதாக அல்லது தன்னையே காயப்படுத்திக் கொள்ளப் போவதாக அச்சுறுத்துவது போன்ற மிரட்டும் பழக்க வழக்கங்களும் கட்டுப்பாட்டு வகையின் ஒரு பகுதியேயாகும். ஊனமுள்ளதோர் பெண், உதவி அல்லது கவனிப்பிற்கு அடுத்தவரைச் சார்ந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், அந்தக் கவனிப்பை விலக்கிக் கொள்வது அல்லது ஒருவிதத் தோரணையை அல்லது கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கிற வழிகளில் அக்கவனிப்பை வைத்து மிரட்டுவது என்பது அதிகாரத்தின் ஏற்றுக் கொள்ளமுடியாத உபயோகமாகும். பச்சிளங்குழந்தைகளை அமர்த்துவது அல்லது தாய்ப்பால் புகட்டுவதைத் தடுப்பதன் மூலம் தாய்மையை வேரறுப்பது என்பது ஒருவகை வீட்டு மற்றும் குடும்ப வன்முறையேயாகும்.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை பெண்கள் அனுபவிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது
வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை ஆண்கள் பெண்களுக்கு எதிராகச் செய்வதற்கே அதிக வாய்ப்புள்ளது என்றே புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
பெண்களின் சில பிரிவினர், வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை அனுபவிப்பதற்கான மிக அதிகமான ஆபத்தில் இருக்கிறார்கள்:
-
கருவுற்ற பெண்கள்.
-
பிரிந்து வாழும் பெண்கள்.
-
ஊனமுள்ள பெண்கள்.
-
பழங்குடியின மற்றும் டோரெஸ் ஸ்டெர்யிட் தீவுப் பெண்கள்.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்த சில யதார்த்தங்கள்
-
துணைவர்கள் அல்லது முன்னாள் துணைவர்கள்செய்கிறவன்முறையைப் பெண்கள் அனுபவிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
-
துஷ்பிரயோகம் செய்பவர்கள், அழகானவர்களாகவும், அவர்கள் இருக்கிற சமுதாயத்தில் மதிக்கப்படுபவர்களாகவும் இருக்கலாம், அல்லது தங்களைத் தாங்களே பாதிக்கப்பட்டவர்களாகக் காண்பித்துக் கொள்ளவும் செய்யலாம். வீட்டு மற்றும் குடும்ப வன்முறையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் பெரும்பாலும் தாங்கள் ‘டாகர் ஜெக்கில் அண்டு மிஸ்டர் ஹைடு’ கதாபாத்திரம் போன்ற குணமுடைய ஒருவருடன் அல்லது ‘தெருவில் தேவதை/வீட்டில் பிசாசு’ குணமுள்ளவருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.
-
துஷ்பிரயோகம் செய்கிறவர்கள் பெரும்பாலும் தாங்கள் துஷ்பிரயோகம் செய்வதை மறுக்கிறார்கள் அல்லது அவர்கள் துஷ்பிரயோகம் செய்கிற நபரைக் குற்றம் சுமத்துகிறார்கள். அவர்கள் துஷ்பிரயோகம் செய்து நடந்து கொள்வதை நியாயப்படுத்துகிறார்கள் அல்லது அது அவர்களது உரிமை என்று நினைக்கிறார்கள்.
-
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை நடைபெறுகிற குடும்பங்களில் வாழ்ந்து வருகிற குழந்தைகள், அவர்களால் அவ்வன்முறையைப் பார்க்க அல்லது கேட்க முடிவதில்லை என்றாலும், அதனால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஏனென்றால், அவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள் அனுபவித்த வீட்டு வாழ்க்கைக்கான பயம் அல்லது சீர்குலைவு காரணமாகவேயாகும். குழந்தைகளைப் பொருத்த வரையில், வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்பது ஒரு ரணம் ஆகும்?
-
ஆணோடு ஆண் உறவு கொள்பவர்கள், பெண்ணோடு பெண் உறவு கொள்பவர்கள், திருநங்கையர் மற்றும் இருபாலினர் ஆகியோரும் வன்முறையான அல்லது துஷ்பிரயோக உறவுகளில் இருக்கலாம்.
வீட்டில் நடைபெறுகிற மற்ற வன்முறை வகைகள்
அனைத்து வன்முறைகளையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போலத் தான் வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை, குடும்பங்களிலும், உறவுகளிலும் ஏற்படுகின்ற மற்ற வகை வன்முறையையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இவை அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டின் பழக்க வழக்க வகைகளோடு இணைந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் அவை தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாய ஒருமைப்பாட்டிற்குமே தீங்கிழைப்பவையாகும்.
வன்முறை என்பது, எந்தவகை உறவிலும் ஏற்படலாம். இதில், பெண்கள் ஆண்களின் பால் செய்கிற வன்முறையும், வயதானவர்களை அல்லது ஊனமுள்ளவர்களைக் குறிவைத்துச் செய்கிற வன்முறையும், பெற்றோர்களின் பால் பதின்வயதினர் செய்கிற வன்முறையும் அடங்குகின்றன.
வீட்டில் மற்றவகை வன்முறை அல்லது துஷ்பிரயோகத்தை அனுபவிக்கிறவர்கள், வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை அனுபவிக்கிறவர்களைப் போன்ற அதே வழிகளில் வேதனையடையலாம், தீங்கடையலாம் அல்லது அவமானப்படலாம்.
குழந்தையைத் துஷ்பிரயோகம் செய்வது என்பது, வீட்டில் நடைபெறுகிற ஒருவித வன்முறையேயாகும் மேலும் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கிறதோர் இளம் நபராக இருக்கிற பட்சத்தில், நீங்கள் 1800 55 1800 என்ற எண்ணில் Kids Helpline -ஐத் தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறையினரை 000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் உடனடி ஆபத்தில் இருக்கிற பட்சத்தில் 000 என்ற எண்ணில் காவல்துறையினரை அழையுங்கள்.
ஒரு உறவில் அல்லது உங்கள் குடுமத்திற்குள் மற்ற வகை வன்முறைகள் எதையும் நீங்கள் அனுபவிக்கிற பட்சத்தில், இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கு அப்போதும் மதிப்புள்ளவையாக இருக்கும், அதோடு இங்கே பட்டியலிட்டுள்ள அநேகச் சேவைகளும் உதவிகரமானவையாக இருக்கும். 1800RESPECT சேவைத் தொலைபேசி, வீட்டில் உறவு துஷ்பிரயோகம் அல்லது வன்முறையின் அனைத்து வகைகளோடும் வாழந்து கொண்டிருக்கிறவர்களுக்கு ஆதரவையும் தகவல்கலையும் வழங்க முடியும். 1800 737 732 என்ற எண்ணில் அழையுங்கள்.
உடனடி ஆபத்து எனும் நிலையில், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணை அழையுங்கள்.
டீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்றால் என்ன? வீட்டு மற்றும் குடும்ப வன்முறையைப் புரிந்து கொள்வது என்பது அவற்றுக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவுகிறது.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து
Developed with: Safe and Equal