பால் ரீதியாகத் தாக்குதல் அடைந்துள்ள ஒருவருக்கு நான் எவ்விதம் ஆதரளிப்பது?
பால் ரீதியான தாக்குதல் என்பது பொதுவானதே - கிட்டத்தட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிறார். நடைமுறையில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.
ஒருவர் பால் ரீதியிலான வன்முறையை அனுபவிக்கும் போது, அவர்கள் யாரிடம் அது குறித்துப் பேசத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மிக முக்கியமானதோர் பங்கினை வகிக்கிறது. ஆதரவுள்ளதோர் குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது உடன் பணியாற்றும் ஒருவர், ஆதரவு மற்றும் உதவி தருவதற்கானதோர் முக்கியமான மூலமாக இருக்க முடியும். அதற்கு எவ்விதம் பதிலளிப்பது என்பதைத் தெரிந்து கொள்வது சிரமமானதாக இருக்கலாம் மேலும் தவறான காரியத்தைச் செய்து விடுவோமோ என நினைத்து நீங்கள் கவலையடையலாம். நீங்கள் செய்ய முடிகிற சில எளிய காரியங்களும் இருக்கத் தான் செய்கின்றன மேலும் பின்வரும் தகவல்கள் நீங்கள் பதிலளிக்க உதவும். தொழில் முறையிலான உதவியும் கிடைக்கத் தான் செய்கிறது.
பால் ரீதியிலான தாக்குதல் குறித்து இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள, பால் ரீதியிலான தாக்குதல் என்றால் என்ன? என்பதைப் படியுங்கள்
உதவி பெறுதல்
பால் ரீதியிலான தாக்குதல் சேவைகள் என்பவை, உதவி பெறுவதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகும். இவர்கள் சமீபத்தில் பால் ரீதியான தாக்குதலை அடைந்துள்ளவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கிறவர்களுக்கும் ஆலோசனையையும், தகவல்களையும் வழங்குகிறார்கள். உங்களுக்கு அருகில் உள்ள பால் ரீதியிலான தாக்குதல் சேவைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம் [ஆங்கிலத்தில்]. பெரும்பாலான சேவைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அலுவல் நேரத்திற்குப் பின்பான ஆதரவு வசதிகள் உள்ளன.
1800RESPECT சேவையின் 24 மணி நேரத் தொலைபேசிச் சேவையும் உதவி பெறத் துவங்குவதற்கான ஒரு நல்ல முறையாக இருக்க முடியும். பால் ரீதியிலான வன்முறையை அனுபவித்திருக்கிறவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிற குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுக்கும் தேவைப்படுகிற தொலைபேசி ஆற்றுநர் சேவைகள், ஆலோசனை மற்றும் தகவல்களை சேவை 1800RESPECT வழங்குகிறது, தொலைபேசி 1800 737 732.
என்ன செய்வது
பால் ரீதியிலான தாக்குதலைக் குறித்துப் பேசுவது என்பது பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவர்களைப் பொருத்த மட்டில் சிரமமானதாக இருக்கலாம். தங்களை நம்ப மாட்டார்கள், தங்களைத் தான் குற்றம் சுமத்துவார்கள் அல்லது தாங்கள் அனுபவித்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அல்லது அதனைக் குறைத்து மதிப்பிடுவார்கள் என்பதாக நினைத்துத் தான் பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்த அநேகர் பயப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
கீழே அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ள ஆறு படிகள், இது போன்ற பயங்களைத் தீர்ப்பதிலும், பால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்துள்ள ஒருவருக்கு ஆதரவளிப்பதிலும் உதவி புரியும்.
நம்புங்கள்
தாங்கள் பால் ரீதியாகத் தாக்குதல் அடைந்திருப்பதாக ஒருவர் வந்து உங்களிடம் சொல்லும் போது, உங்களது பங்கு என்பது அவர்கள் சொல்வதை நம்பி, அவர்களுக்கு ஆதரவளித்து, அடுத்து என்ன செய்வது என்பதற்கான வழிவகைகளைக் காண உதவுவதேயாகும். அநேகக் கேள்விகளைக் கேட்க விரும்புவது இயற்கையான ஒன்று தான் ஆனால் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பது அடுத்தவர் விஷயத்தில் அளவிற்கதிகமாக மூக்கை நுழைப்பதைப் போல உணரச் செய்து விடலாம். கேள்வி கேட்பதற்கு முன், செவி கொடுத்துக் கேளுங்கள்.
செவி கொடுத்துக் கேளுங்கள்
சிலர் தங்களது அனுபவம் குறித்து உடனடியாகப் பேசிவிட விரும்புகிறார்கள் சிலரோ அவ்விதம் விரும்புவதில்லை. பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்த ஒருவர் பேசத் தயாராகும் போது, குறுக்கிடாமல் செவிசாய்க்க விளைவதும், அவர்களுக்காக நிற்பதும், தீர்ப்புக் கொடுப்பவராக இல்லாமல் இருப்பதும், ஆதரவளிப்பதன் முக்கியமானதோர் பகுதியாகும்.
வழிவகைகளைக் காண உதவுங்கள்
பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்துள்ள ஒரு நபருக்குள்ள உரிமைகள் மற்றும் வழிவகைகள் என்னென்ன என்பதைக் குறித்து அவர்களைத் தெரிந்து கொள்ளச் செய்வதன் மூலம், அடுத்து என்ன நடைபெறுகிறது என்பதில் கூடிய மட்டும் எவ்வளவு கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டையும் வைத்திருப்பதற்கான அவரது உரிமையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். கிடைக்கும் சேவைகளைத் தேடிப்பிடித்துக் கொடுப்பதன் மூலமாகவும், அவற்றை எவ்விதம் உபயோகிப்பது என்பதை என்பதைச் சொல்வதன் மூலமாகவும் நீங்கள் அவர்களுக்கு உதவி புரியலாம். பால் ரீதியிலான தாக்குதலின் பாதிப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் / தப்பிப்பிழைத்தவர்கள் உடனடியாக இத்தகைய விஷயங்கள் குறித்து சிந்திப்பதைக் கடினமாக்கி விடலாம். சேவைகளைத் தேடிப்பிடித்து, அவற்றைப் பெறுவதில் உதவி செய்வது என்பதும், பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவர் இந்த வழிவகையைத் தொடர விரும்புகிற பட்சத்தில், ஒரு நல்ல ஆரம்பப் புள்ளியாகவே இருக்கலாம்.
ஒருபோதும் குற்றம் சுமத்தாதீர்கள்
பால் ரீதியிலான தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவரை ஒருபோதும் குற்றம் சுமத்த முடியாது. பால் ரீதியிலான தாக்குதல் என்பது ஒருபோதும் சரியல்ல. ஒரு நபரின் ஆடையோ, அவர்களது கலாச்சாரம், வயது, போதை மருந்து அல்லது மது உபயோகம் அல்லது பால் ரீதியாகத் தாக்குதல் தொடுக்கும் நபரோடு உள்ள உறவுமுறை ஆகியவை, ஒருவரை பால் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகச் செய்வதற்கு ஒருபோதும் பொறுப்பாக முடியாது.
நீங்கள் போதிப்பதற்கு முன் கேளுங்கள்
ஒரு பால் ரீதியிலான தாக்குதலுக்குப் பிறகு, சிலர் தங்களைத் தொடுவதை விரும்புவதில்லை. முன்னரே கேட்டுக் கொள்வது முக்கியமானதாகும். உதாரணமாக: “உங்களை நான் ஆரத் தளுவிக் கொள்ளலாமா?” இப்படிக் கேட்டுக் கொள்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்குள்ள வேதனையான நினைவுகளைத் தூண்டி விடுவதற்கு அல்லது அந்தத் தாக்குதலோடு தொடர்புடைய காயத்தை மறுபடியும் அனுபவிக்கச் செய்வதற்குக் குறைந்தளவு வாய்ப்பே உள்ளது.
உங்களது சொந்த உணர்வுகளை ஏற்றுக் கொண்டு நீங்களே உங்களுக்கு உதவி பெற நாடுங்கள்
வன்முறையான அல்லது காயமுண்டாக்கும் நிகழ்வு ஒன்றின் வழியாக பாசத்திற்குரிய ஒருவர் கடந்து செல்லும் போது மனமுடைந்து போவது, ஏன் கோபமடைவது கூட இயல்பானது தான். உங்களது உணர்வுகளை ஏற்றுக் கொண்டு, உங்களுக்கு உதவி தேவைப்படும் போது அதனை நாடிப் பெறுங்கள். நீங்கள் 1800RESPECT சேவையை அழைக்கலாம், அல்லது பால் ரீதியிலான தாக்குதல் சேவைகள் ஒன்றிடம் அல்லது உங்களது உடல்நல நிபுணரிடம் பேசலாம்.
பால் ரீதியிலான தாக்குதலின் பாதிப்புகள்
இது போன்ற பாதிப்புகளைப் புரிந்து கொள்வது, பால் ரீதியிலான தாகுதலை அனுபவித்திருக்கிற ஒருவருக்கு ஆதரவளிக்க நமக்கு உதவ முடியும். பால் ரீதியிலான தாக்குதலின் தாக்கங்கள் பலதரப்பட்டவையாக இருக்கலாம் மேலும் அவற்றில் உடல் ரீதியிலான, உணர்ச்சிப் பூர்வமான, மற்றும் மன ரீதியிலான தாக்கங்கள் ஆகியவை அடங்கலாம். பெரும்பாலான பால் ரீதியிலான தாக்குதல்களை நமக்குத் தெரிந்த நாம் நம்பிக்கை வைத்துள்ளதோர் நபரே தொடுக்கிறார் மேலும் அதன் விளைவுகள் குடும்பத்தின் அந்தரங்க இடைவெளியில் அல்லது நண்பர்கள் குழுக்களிடத்தில் தான் வெளிவருகின்றன. பால் ரீதியிலான தாக்குதலை அடைந்திருக்கிறவர்களின் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பதும் அவர்களது வேதனையைக் குறைக்க உதவலாம். பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருகையில் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும்.
உடல்நலப் பிரச்சினைகள்
சமீபத்தில் பால் ரீதியான தாக்குதலை அனுபவித்துள்ள ஒருவருக்கு ஆதரவளிப்பது என்பதற்கு, அவர்களிடம் உடல் ரீதியிலான காயங்கள் மற்றும்/அல்லது பால் ரீதியிலான அல்லது மற்ற உடல்நலப் பிரச்சினைகள் எதையும் குறித்து பேசுவது என்றும் அர்த்தமாகிறது. பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்த ஒருவர் பின்வருவனவற்றை நினைத்துப் பயப்படலாம்:
-
கர்ப்பமடைதல்
-
பால் ரீதியாகக் கடத்தப்படுகிற நோய்த்தொற்றுக்கள் (STIs)
-
HIV நோய்த்தொற்றுக்கு ஆட்படுதல்
-
பொதுவான உடல்நல நிலைமைகள்
பால் ரீதியான தாக்குதலை அனுபவிப்பது, மிக ஆழமானதோர் வழியில் தங்களது சொந்த உடல் மீது அவர்களுக்குள்ள கட்டுப்பாட்டு உணர்வையே துடைத்தெரிந்து போட்டு விடுகிறது என்பதை சுகாதாரக் கவனிப்பை வழங்கும் ஒருவர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களோடு பேசி இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது எதற்கும், அவர்களது சொந்த உடல் மீதும், அவர்களது சொந்த முடிவெடுக்கும் திறன் மீதும் அவர்களுக்குள்ள கட்டுப்பாட்டு உணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டியுள்ளது.
காவல்துறையினரிடம் தெரிவித்தல்
பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவர் தமக்கு இழைக்கப்பட்டுள்ள பால் ரீதியிலான தாக்குதலைக் காவல்துறையினரிடம் அறிவிக்க விரும்புகிற பட்சத்தில், அதனைக் குறித்து சிந்திப்பதற்கான சில முக்கியமான பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. அந்த அமைப்பு எவ்விதம் வேலை செய்கிறது என்பது பாதிப்படைந்த / தப்பிப் பிழைத்த ஒருவரோடு உழைக்கிற ஒருவருக்குத் தெரிந்திருந்து, முக்கியமான விஷயங்களை ஒரு மரியாதை நிரம்பிய, விரிவானதோர் வழியில் பேச இயன்றால் அது உபயோகமானதாக இருக்கிறது. இது பாதிப்படைந்த / தப்பிப்பிழைத்த நபருக்கு இன்னும் அதிகக் கட்டுப்பாட்டையும், வழிவகையையும் வழங்க உதவுகிறது.
பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்ததோர் நபர் காவல்துறையில் அறிவிக்காமல் இருந்து கொள்ளவோ அல்லது மருத்துவ அல்லது தடயவியல் மருத்துவப் பரிசோதனையைச் செய்து கொள்ளாமலிருக்கவோ தெரிவு செய்யலாம். இது ஒரு தனிப்பட்ட விருப்பமாகும் இதற்கு மதிப்பளித்தேயாக வேண்டும்.
ஆஸ்திரேலியாவில், காவல்துறையினர் மதம் அல்லது அரசியல் குழுக்களின் சார்பில்லாமல் இயங்குகின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்தின் பாராளுமன்றத்தின் முகப்புப் பக்கத்தில் எழுதப்பட்டு, அதில் புகுபதிகை செய்வதன் மூலம் அணுகக்கூடிய குற்றவியல் சட்டங்களினால் நடத்தப்படுகின்றனர். காவல்துறையினரின் பங்கு என்பது தடயத்தை சேகரித்து, அறிவித்துள்ள பால் ரீதியிலான தக்குதல் எதுவோடும் தொடர்புடைய விஷயங்களை விசாரணை செய்வதேயாகும்.
புகாரளிக்கும் போது பரிசீலிக்க வேண்டிய காரியங்கள்
உங்கள் பகுதி பால் ரீதியிலான தாக்குதல் சேவை உங்கள் மாநிலத்தில் அல்லது பிரதேசத்தில் உள்ள புகாரளித்தல் மற்றும் சட்ட நடைமுறையைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவிபுரிய முடியும். சட்ட மொழியும், நடைமுறைகளும் குழப்புவதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எப்போதுமே புரியாத எதையும் எளியதோர் மொழியில் விளக்கிச் சொல்லுமாறு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஏதேனுமிருந்தால் அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தயங்காதீர்கள்.
குழந்தைகளும் சிறுவர்களும் ஈடுபட்டிருக்கும் போது
குழந்தைகளும், சிறுவர்களும் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கும் போது, அதைக் குறித்து முதலில் அவர்கள் பேசுகிற நபர் அவர்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கச் செய்வதிலும், ‘உணர்ச்சிப்பூர்வமான முதலுதவியை’ வழங்குவதிலும் மிக முக்கியமானதோர் பங்கினை வகிக்க முடியும்.
உங்கள் பங்கு குறித்துத் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சொல்வதை நம்பி, அவர்களைத் தேற்றி, நடந்துள்ளது எதற்கும் அவர்கள் எவ்வழியிலும் பொறுப்பானவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த உதவி செய்ய வேண்டியுள்ளது. நடந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில், துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு குழந்தை அல்லது சிறுவர் சார்பில் செயல்படுவதற்கு அவர்கள் உங்களையே நம்பியுள்ளார்.
ஒரு குழந்தையோடு செய்கிற பால் ரிதியான செயல்பாடு எதுவுமே குற்றம் தான் மேலும் அதனைக் காவல்துறையில் புகாரளிக்க முடியும். அழையுங்கள் 000.
பால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்திருக்கிற ஒரு குழந்தை அல்லது சிறுவருக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்றால், அதற்கு உதவக்கூடிய சேவைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
கூடுதலாக, பொதுவான பிரிவில் மேலே பட்டியலிட்டுள்ள சேவைகளுக்குக் கூடுதலாக, குழந்தைகளும், சிறுவர்களும் ஈடுபட்டிருக்கும் போது ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரியங்களும் இருக்கின்றன. உங்கள் பகுதியில் உள்ள பால் ரீதியிலான தாக்குதல் சேவை அல்லது குழந்தைப் பாதுகாப்புச் சேவைகள் என்பவை, கிடைக்கக்கூடிய வழிவகைகளைப் புரிந்து கொள்வதிலும், பதில் நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுவதிலும் கிடைக்கிற தகவல் மற்றும் ஆதரவிற்கான இடங்கள் ஆகும்.
ஒரு குழந்தை குறித்துக் கவலைப்படுகிற எவரும், அவர்கள் பகுதியில் உள்ள குழந்தைப் பாதுகாப்புச் சேவையிடம் பேச வேண்டும். இப்போது அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக அறிவிக்க வேண்டிய சட்டங்கள் இருக்கின்றன. இத்தகைய சட்டங்கள், ஒரு சிலர் தாங்கள் கொண்டுள்ள கவலைகள் எதையும் சட்டப்பூர்வமாக உரிய அதிகாரிகளுக்குப் புகாரளிக்க வேண்டும் என்பதையே சொல்கின்றன. புகாரளிக்க வேண்டுமா, நிறுத்த வேண்டுமா, ஆலோசனை பெற வேண்டுமா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால். நீங்கள் உதவிக்கு எப்போதுமே உங்கள் பகுதி பால் ரீதியிலான தாக்குதல் சேவை அல்லது மாநிலக் குழந்தைப் பாதுகாப்பு முகமை போன்ற அப்பகுதியில் உள்ள நிபுணர் ஒருவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் புகார் தெரிவிக்க வேண்டியது குறித்து 1800RESPECT சேவை உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும், தொலைபேசி 1800 737 732.
பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிற குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஆதரவளிக்கும் போது, வயது நிரம்பியவராக உங்களது பங்கு என்பது அவர்களுக்குப் பாதுகாப்புப் பெற்றுத் தருவதும், துஷ்பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதுமேயாகும்.
பாதுகாப்புத் திட்டமிடல் குறித்து
காரியங்கள் பாதுகாப்பற்றவையாக ஆகும் போது அவற்றுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்ததோர் திட்டத்தைக் குறித்து சிந்திப்பதும், அதனை உருவாக்குவதற்குமானதோர் வழியே பாதுகாப்புத் திட்டமிடல் என்பதாகும்.
பாதுகாப்புத் திட்டமிடல் குறித்து
Developed with: Victorian Centres Against Sexual Assault