To leave this site quickly, click the Quick Exit button below. Learn about Quick Exit button here. If you don’t want your browser history saved, please open incognito browsing mode. Learn about incognito mode here. If you're in immediate danger, please call 000.

தமிழ் - 1800RESPECT என்றால் என்ன?

வன்முறைக்கும், துஷ்பிரயோகத்திற்கும் பதிலளிப்பது என்பது நாம் ஒவ்வொருவரது கடமையுமாகும். 1800RESPECT சேவை என்பது தேசிய பால்-ரீதியிலான தாக்குதல், வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சேவையாகும். 1800RESPECT சேவை என்பது, பாதிக்கப்பட்டவர்கள்/தப்பிப் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சேவையாகும். நாங்கள் தொலைபேசி ஆற்றுப்படுத்தல், ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்குகிறோம் மேலும் எமது இணையதளத்தில், உங்கள் பகுதிச் சேவைகளுக்கான தகவல்கள், ஆலோசனை மற்றும் சிபாரிசுக்குரிய வழிவகைகள் உள்ளன. நீங்கள் இவை அனைத்தையும் இந்த இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது 1800 737 732 என்ற எண்ணிற்குத் தொலைபேசியில் அழைப்பதன் வாயிலாகவோ அணுகலாம்.

1800RESPECT சேவை, வன்முறை-இல்லாத சமூகம் ஒன்றில் வாழ்வதற்கு ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் உள்ள உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. நீங்கள் பால்-ரீதியாகத் தாக்கப்பட்டாலோ அல்லது அப்படித் தாக்கப்படுவதற்கான ஆபத்தில் இருந்தாலோ அல்லது வீட்டு அல்லது குடும்ப வன்முறையை அனுபவித்தாலோ அல்லது அனுபவிக்கும் ஆபத்தில் இருந்தாலோ எங்களால் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு / தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்குத் துணை புரிந்து கொண்டிருந்தாலோ அல்லது அத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலோ எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.

உதவி பெறுங்கள்

1800RESPECT சேவையில், தொலைபேசி மற்றும் ஆன்லைன் ஆற்றுநர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவதற்காகவே இருக்கிறார்கள். ஆற்றுநர்கள் பின்வரும் விஷயங்களில் உங்களுக்கு உதவ முடியும்:

  • தகவல் மற்றும் ஆதரவு,

  • சேவையொன்றுக்கு உங்களை சிபாரிசு செய்து அனுப்பி வைப்பது,

  • அடுத்து என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையும் உதவியும் தருவது, மற்றும்

  • பாதுகாப்பானதோர் திட்டத்தைத் திட்டமிடுவது.

தகவல் பெறுங்கள்

1800RESPECT சேவை இணையதளத்தில் தெளிவானதும், ஒளிவுமறைவற்றதுமான தகவல்கள் இருக்கின்றன. இதில், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை குறித்த அடையாளங்களைப் புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பானதோர் திட்டத்தைத் திட்டமிடுவதற்கும், ஆதரவுச் சேவைகளைக் கண்டுகொள்வதற்கும் உங்களுக்கு உதவுவதற்கான தகவல்கள் உள்ளன.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான தகவல் மற்றும் ஆதரவு

1800RESPECT சேவையைக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உபயோகிக்கலாம். உங்களுக்குப் பிரியமான ஒருவர், ஓர் குழந்தை அல்லது உடன் பணியாற்றும் ஒருவர் குறித்து நீங்கள் கவலையடைகிறீர்கள் என்றால், 1800RESPECT சேவை உங்களுக்கு உதவ முடியும்.

ஒருவர் உங்களிடம் வந்து, தாங்கள் வீட்டு அல்லது குடும்ப வன்முறையொன்றை அல்லது பாலுறவு தாக்குதலொன்றை அனுபவித்திருப்பதாகச் சொல்லும் போது அது உங்களுக்கோர் அதிர்ச்சியாக இருக்க முடியும், மேலும் என்ன சொல்லுவது அல்லது என்ன செய்வது என்பது குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாமல் இருப்பது போல் நீங்கள் உணரலாம். குடும்பத்தினரும், நண்பர்களும் ஆதரவை வழங்கும் வகையில் 1800RESPECT சேவை தகவல் மற்றும் ஆதார வளங்களை வழங்குகிறது. குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் ஒரு ஆற்றுநரை அழைத்து, அவரோடு அச்சூழ்நிலையை விவாதித்து, கேள்விகளைக் கேட்டு, இன்னும் அதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்விணையதளத்தில், வீட்டு அல்லது குடும்ப வன்முறையை அல்லது பால் ரீதியான தாக்குதலை அனுபவிக்கிற எவருக்குமான சேவைகள் குறித்த தகவல்கள் உள்ளன மேலும் இதில் ஒவ்வொரு நிலையிலும் பொதுவாகக் கேட்கிற கேள்விகள் மற்றும் சேவைகளுக்கான இணைப்புகளும் இருக்கின்றன. பாதுகாப்புத் திட்டமொன்றை எவ்விதம் திட்டமிடுவது என்பது குறித்தத் தகவலும் இதில் இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது பளு மிகுந்ததாக இருந்துவிட முடியும், மேலும் அதன் தாக்கங்கள் நீண்ட காலம் வரை உணரப்படுகிறது. 1800RESPECT சேவை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்/தப்பிப் பிழைத்தவர்களுக்கு உதவுவதற்காகவே இருக்கிறது.

பணியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கான தகவல் மற்றும் ஆதரவு

பணியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டதோர் பிரிவும் இவ்விணையதளத்தில் இருக்கின்றது. குடும்ப மற்றும் வீட்டு வன்முறை, பால்-ரீதியிலான தாக்குதல், கட்டாயம் அறிவிக்க வேண்டியவை குறித்த தகவல் மற்றும் பணியினால் உண்டான வேதனை ஆகியவை குறித்த தகவலும் இதில் இருக்கின்றது.

சில மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், வீட்டு மற்றும் குடும்ப வன்முறை ஏற்படும் நிலைகளில் அதனை கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்ற சட்டங்களும் இருக்கின்றன. பால்-ரீதியிலான தாக்குதல், உடல்-ரீதியிலான துஷ்பிரயோகம் அல்லது அலட்சியம் போன்றவற்றைக் குழந்தைகள் அனுபவிக்குமிடத்தில் அதனைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்ற சட்டங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலும் இருக்கின்றன. பணியாளர்கள் எப்போது காவல்துறையினரை மற்றும்/அல்லது குழந்தைப் பாதுகாப்புச் சேவைகளைத் தொடர்பு கொண்டாக வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவுவதற்கான தகவல் இவ்விணையதளத்தில் இருக்கின்றது.

மற்றவர்களுக்கு உதவி செய்வது நற்பயன் விளைவிப்பதாக இருக்கலாம், ஆனால் அதற்கு அதிக நேரமும் திறமையும் அவசியமாவதாகவும் இருக்கலாம். அதற்கு அனுதாபம் கொள்வதும், இரக்கம் கொள்வதும் அவசியமாகிறது. பட்ட துயரத்தின் விளைவுகளைத் தொடர்ந்து பார்த்து வருகிற முன்-வரிசைப் பணியாளர்களும், தொழில் நிபுணர்களும், அவ்வப்போது அவர்களது பணியினால் பாதிக்கப்படலாம். பணியாளர்களும், 1800RESPECT ஆற்றுப்படுத்தல் சேவைத் தொலைபேசி எண்ணை அணுகி உதவி பெற்றுக் கொள்ளலாம்.

எவ்விதம் தொடர்பு கொள்வது

நீங்கள் அநேக வழிகளில் 1800RESPECT சேவையை அணுகிப் பெறலாம். 1800 737 732 என்ற (மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்கிறார்கள்) எண்ணிற்குத் தொலைபேசியில் அழைப்பதன் மூலம் தொலைபேசிச் சேவையை அணுகிப் பெறுங்கள். அணுகிப் பெறக்கூடிய மற்ற சேவைகளுக்கு National Relay Service என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்.

ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் உங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கலாம். 1800RESPECT முகப்புப்பக்கம் வாயிலாக ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் சேவையை அணுகிப் பெறுங்கள். ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் நேரலையானதாகும். அதிலுள்ள ஆற்றுப்படுத்துனர் நேரடியாக உங்களோடு தகவல்தொடர்பு கொள்வார். 1800RESPECT ஆன்லைன் சேவையை உபயோகிக்க, உங்கள் இணைய உலாவியில் ‘popup-blocking’ என்பதை ஆஃப் செய்து வையுங்கள். உங்களுக்கு நம்பகமானதோர் இணைய இணைப்புத் தேவைப்படலாம்.

நேருக்கு நேர் சந்தித்து அல்லது தொலைபேசி வாயிலாக ஆற்றுநர் சேவையைப் பெற வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்கள் அதனை இவ்விணையதளத்தின் வாயிலாகவே வேண்டிப் பெறலாம்.

இவ்விணையதளத்தை அணுக, 1800RESPECT என்ற இணைய முகவரிக்குச் செல்லுங்கள்.

 

உடனடி ஆபத்து எனும் நிலையில், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணை அழையுங்கள்.

டீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.

 

ஒரு டீஐஎஸ் மொழிபெயர்ப்பாளர் கொண்டு தொலைபேசி ஆற்றுதல் சேவையை உபயோகித்தல்

1800RESPECT சேவையைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்களுக்கு, 24/7 தொலைபேசி மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி மாற்றுநர்கள் சேவை (டீஐஎஸ் நேஷனல்) இலவசமாகக் கிடைக்கிறது. இதனை ஏற்பாடு செய்ய: 1800 737 732 என்ற எண்ணில் 1800RESPECT சேவையை அழைத்து, ஒரு மொழி மாற்றுநர் வேண்டுமெனக் கேளுங்கள். அங்குள்ள ஆற்றுநர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார், அல்லது 131 450 என்ற எண்ணில் TIS சேவையை அழைத்து, 1800RESPECT சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டுமென அவர்களிடம் கேளுங்கள்.

TIS

 

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்றால் என்ன? வீட்டு மற்றும் குடும்ப வன்முறையைப் புரிந்து கொள்வது என்பது அவற்றுக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவுகிறது.

 வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து

 

Developed with: Ethnic Child Care, Family and Community Services Co-operative