பாதுகாப்புத் திட்டமிடல் குறித்து
காரியங்கள் பாதுகாப்பற்றவையாக ஆகும் போது அவற்றுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்ததோர் திட்டத்தைக் குறித்து சிந்திப்பதும், அதனை உருவாக்குவதற்குமானதோர் வழியே பாதுகாப்புத் திட்டமிடல் என்பதாகும்.
பாதுகாப்புத் திட்டமொன்றை உருவாக்குவதற்கு அநேக வித்தியாசமான வழிகள் இருக்கின்றன. அவரவருடைய தனித்தனிச் சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் வகையிலும், இப்போதைக்குப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலுமே ஒரு திட்டத்தைத் திட்டமிட வேண்டியுள்ளது. சூழ்நிலைகள் மாறும் போது அத்திட்டமும் மாறிவிடும்.
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகளையும், யோசனைகளையும் ஆராய்ந்து, வகுப்பதற்கு ஒரு திட்டம் உதவி செய்ய முடியும். பால் ரீதியான தாக்குதலைத் தொடுப்பவர் முகம் தெரிந்த ஒரு நபராக இருக்கும் போது, அத்தாக்குதலுக்கு ஆட்படுகிறவர்களுக்கும் இது உதவ முடியும்.
ஆதரவு மற்றும் தகவல்களைக் கொடுத்து உதவுவதில் குடும்பத்தினரும், நண்பர்களும் முக்கியமானதோர் பங்கினை வகிக்க முடியும். காரியங்களை ஒழுங்குபடுத்தவும், ஆதரவளிப்பதற்காகவே, வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சேவைகளும், பால் ரீதியிலான தாக்குதல் சேவைகளும் இருக்கின்றன. வெவ்வேறு வழிவகைகளைக் குறித்துச் சிந்திக்க உதவுவதற்கு இச்சேவைகள் உதவ முடியும்.
பாதுகாப்புத் திட்டமொன்றை உருவாக்குவதற்கு அநேக வித்தியாசமான வழிகள் இருக்கின்றன. அவரவருடைய தனித்தனிச் சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் வகையிலும், இப்போதைக்குப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலுமே ஒரு திட்டத்தைத் திட்டமிட வேண்டியுள்ளது. சூழ்நிலைகள் மாறும் போது அத
நீங்கள் உங்களுக்கென்றே ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கலாம் அல்லது வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிற குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவருக்காக அத்திட்டத்தை உருவாக்கலாம்.
உங்களுக்கானதோர் பாதுகாப்புத் திட்டம்
உங்களுக்கானதோர் பாதுகாப்புத் திட்டத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், எவையெவை வேலை செய்திருக்கின்றன, எவையெவை வேலை செய்திருக்கவில்லை என்பது குறித்ததோர் நல்ல யோசனைகள் உங்களிடம் ஏற்கெனவே இருக்கும். இது ஒரு வலிமையே. ஏற்கெனவே வேலை செய்கிற காரியம் குறித்து சிந்தித்துப் பார்த்து, அதன்பின் பாதுகாப்பிற்மான நடவடிக்கை குறித்ததோர் திட்டத்தை நீங்கள் அமைத்துக் கொள்ள வேறு வழிவகைகள் எவையும் உதவ முடியுமா என்பதைப் பார்க்க கீழுள்ள சோதிப்புப் பட்டியலை ஒருமுறை பாருங்கள்.
உங்களுக்கானதோர் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கேயுள்ளன:
-
வன்முறையைச் செய்பவர் தான் அந்த வன்முறைக்குப் பொறுப்பானவர். வன்முறையைத் தவிர்க்க முயல்வது, நீங்கள் எப்போதுமே ‘கயிற்றின் மேல் நடப்பவர் போல்’ உணரச் செய்துவிடும், ஏனென்றால் துஷ்பிரயோகம் செய்கிற நபர்கள் பெரும்பாலும் அவர்களது கோபத்தையும், ஆக்ரோஷமான வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதையும் நியாயப்படுத்தி, சாக்குப் போக்குச் சொல்வதற்கு புதிய தூண்டி விடும் விஷயங்களைக் காணவே முயல்கிறார்கள். பாதுகாப்பை எவ்விதம் அதிகரிப்பது என்பதற்காகத் திட்டமிடுவது என்பது, வன்முறைக்கு அல்லது ‘கோபதாபங்களுக்குப்’ பொறுப்பேற்பதைப் போன்ற அதே விஷயமல்ல.
-
பாதுகாப்புத் திட்டங்களை, குறிப்பான கர்ப்பமடைதல், புதிதாகக் குழந்தை பிறத்தல், அல்லது வாழும் சூழ்நிலையில் மாற்றம் ஒன்று ஏற்படுதல் போன்று காரியங்கள் மாறும் போது, தொடர்ச்சியாக அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
-
வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சேவைகள் அமைப்பு, உங்களுக்கு ஆதரவை வழங்கி, உங்களிடம் ஏற்கெனவே உள்ள யோசனைகளோடு கூடுதலாக யோசனைகளை வழங்கி உதவ முடியும். உங்கள் பகுதியில் கிடைக்கிற சேவைகளுக்கு [ஆங்கிலத்தில்] இங்கே பாருங்கள் அல்லது 1800 737 732 என்ற எண்ணில் 1800RESPECT சேவையைத் தொலைபேசியில் அழையுங்கள்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கானதோர் பாதுகாப்புத் திட்டம்
வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒருவருக்காக ஒரு பாதுகாப்புத் திட்டத்தைத் திட்டமிடும் போது, அவர்கள் சொல்வதை செவிமடுத்துக் கேட்பதன் மூலம் அதனைத் திட்டமிட ஆரம்பியுங்கள். தனது சூழ்நிலையைப் பொருத்த வரையில் பெண் என்பவள் ஒரு நிபுணராகவே இருக்கிறாள். முதலில் செவிமடுத்துக் கேளுங்கள், அடுத்து என்னென்ன நடந்துவந்து கொண்டிருக்கிறதோ அது குறித்துக் கேள்விகளைக் கேளுங்கள். இது அங்குள்ள ஆபத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவும். முதலில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அவர் ஏற்கெனவே என்னென்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்த்து, அவரது பாதுகாப்பை வேறு என்னென்ன விஷயங்கள் அதிகரிக்கலாம் என்பது குறித்து அவரைச் சிந்திக்கச் செய்ய உதவுவதற்கானதோர் அடித்தளமாக இதனை அமையுங்கள். அத்திட்டத்தை எவ்விதம் உருவாக்குவது என்பது குறித்த சில யோசனகளைக் கீழுள்ள சோதிப்புப் பட்டியல் வழங்கலாம் ஆனால் இத்தகைய யோசனைகள் அனைத்துமே பொருத்தமானதாக இருந்து விடுவதில்லை.
வன்முறையைச் செய்பவர்கள் பலராக இருந்து, இத்திட்டத்தைப் பாதிக்கிற மற்ற தனித்தனித் தேவைகள் இருக்கலாம் என்பதையும் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களது வேலை என்பது நியாயம் வழங்குவதோ அல்லது முடிவுகளை எடுப்பதோ அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ‘அப்படியே விட்டுச் செல்வது என்பது’ எப்போதுமே பாதுகாப்பானதோர் வழிவகையாக இருந்து விடுவதில்லை. விட்டுச் செல்வது என்பது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறதோர் நேரம் என்பது நமக்குத் தெரியும். உங்களது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்குக் வேலை செய்கிறதோர் திட்டத்தை அமைத்துக் கொடுப்பதற்கு அவரோடு சேர்ந்து உழையுங்கள்.
உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கானதோர் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கேயுள்ளன:
-
ஒரு பாதுகாப்புத் திட்டம் என்பது, நம்பிக்கையான உறவுஒன்றைக் கட்டமைப்பதின் ஓர் அங்கமாக இருக்கலாம். இந்த உறவு, பாதிக்கப்பட்டவருக்கு / அதிலிருந்து தப்பிவந்தவருக்கு மிக முக்கியமானதோர் ஊன்று கோலாகஇருக்கலாம்.
-
குழந்தைகள் ஈடுபட்டிருந்தால், குழந்தைகளைப் பாதுகாப்பாகவைத்துக் கொள்வது என்ற எங்களது வீடியோவைப் பார்ப்பதுஉங்களுக்குப் பலனுள்ளதாக இருப்பதை நீங்கள் காணலாம்.
-
குழந்தைகள் தீங்கிழைக்கப்படுவதன் ஆபத்தில்இருக்கிறார்கள் என்றால், கட்டாயமாக அறிவிக்க வேண்டிய பொறுப்புகள் [ஆங்கிலத்தில்] என்பதை வைத்துக் கொள்ளலாம்.
-
உங்களுக்குத் துணை புரியும் வகையில் நீங்கள் நிபுணர் சேவைகளை உபயோகிக்க வேண்டியதிருக்கலாம். ஒரு பெண் இச்சேவைகள் வேண்ட்மென விரும்பினால், வீட்டு வன்முறை, சட்டம், கலாச்சாரம் மற்றும் நடப்பில் உள்ள ஆதரவுச் சேவைப் பிரிவுகளில் உள்ள நிபுணர்களிடம் அவரை அனுப்பி வையுங்கள். உங்கள் பகுதியில் கிடைக்கிற சேவைகளுக்கு [ஆங்கிலத்தில்] இங்கே பாருங்கள் அல்லது 1800 737 732 என்ற எண்ணில் 1800RESPECT சேவையைத் தொலைபேசியில் அழையுங்கள்.
தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதற்கானதோர் சோதிப்புப் பட்டியல்
இந்தச் சரிபார்ப்புப் பட்டியல், பாதுகாப்பை அதிகரிக்க உதவுவதற்கு நீங்கள் செய்ய முடிகிற காரியங்களுக்கானதோர் பொதுவான வழிகாட்டியாகும். ஒவ்வொரு நபரின் தனித்தனி சூழ்நிலைகளுக்கு ஏற்பவே பாதுகாப்புத் திட்டமிடுதலை அமைத்துத் தர வேண்டும் என்பதைத் தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாப்புத் திட்டமிடல் சரிபார்ப்புப் பட்டியல்
இந்தச் சரிபார்ப்புப் பட்டியல், பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் செய்ய முடிகிற காரியங்களுக்கானதோர் வழிகாட்டியாகும்.
பாதுகாப்புத் திட்டமிடல் சரிபார்ப்புப் பட்டியல்
Developed with: Domestic Violence Resource Centre Victoria